வேலைவாய்ப்புக்கான கலங்கரை விளக்கங்கள் - Job News Websites Links - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مارس 16، 2021

Comments:0

வேலைவாய்ப்புக்கான கலங்கரை விளக்கங்கள் - Job News Websites Links

வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் பல நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன. சமூக வலைதளங்களில் அவற்றைப் பகிர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மத்திய அரசு வேலை வாய்ப்பு, மாநில அரசு வேலை வாய்ப்பு போன்ற வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இன்னும் ஒருபடி மேலே போய் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் வழங்கப்படுகின்றன. சிலருக்கு காவல்துறையில் வேலை செய்வது கனவாக இருக்கும். சிலருக்கோ ராணுவத்தில். சிலர் வங்கிப் பணி செய்ய விரும்புவார்கள். எந்த வேலையாக இருந்தாலும் சரி, அது அரசு வேலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உள்ளனர். இவ்வாறு பல்வேறுதுறைசார்ந்த வேலைவாய்ப்புகளைப் பற்றிய தகவல்கள், அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.
வேலைவாய்ப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள "எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' போன்ற இதழ்களும் வெளியிடப்படுகின்றன. பல மாநில மொழிகளிலும் வேலைவாய்ப்புச் செய்திக்கென இதழ்கள் உள்ளன. இவ்வளவு இருந்தும், உரிய நேரத்தில் உரிய வேலைக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் வாய்ப்புகளைத் தவறவிட்டவர்கள் அதிகம்.
தமிழகத்தில் பள்ளி மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா – ஆன்லைன் வகுப்புகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!
இதற்கு என்ன காரணம்? எல்லாத் தகவல்களும் எல்லாருடைய கண்களிலும் படுவதில்லை. ஒரு வேலை வாய்ப்புத் தகவலைத் தெரிந்து கொண்டஒருவர், அதைப் பற்றி பிறரிடம் பேசுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வது? வலைதளங்கள் பல்கிப் பெருகியுள்ள இன்றையச் சூழ்நிலையில், என்ன வேலைக்கு எந்த வலைதளத்தைப் பார்க்க வேண்டும் என்பதை இளைஞர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வேலைவாய்ப்புக்கான வலைதளங்களை ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது சிறிது நேரம் ஒதுக்கி பார்க்கும் பழக்கத்தை இளைஞர்கள் ஏற்படுத்திக் கொண்டால், வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் முடியும். அப்படித் தெரிந்து கொண்ட தகவல்களை வேலைவாய்ப்பு கிட்டாமல் தவித்துக் கொண்டிருக்கும் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
நாம் சில வேலைவாய்ப்பு தொடர்பான, போட்டித் தேர்வுகள் தொடர்பான வலைதள முகவரிகளை இப்போது பார்ப்போம்.
1. https://www.tnpsc.gov.in/
(தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் ஆணைய வலைதளம்)
2. https://www.dailyrecruitment.in/tamilnadu-psc-jobs/
3. http://www.tamilanguide.in/
4. https://tnvelaivaaippu.gov.in/
5. https://www.fresherslive.com/search-jobs/chennai
6. https://entri.app/blog/best-app-for-tnpsc-group-2-preparation/


மின்வாரிய பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் (தமிழ்நாடு அரசுப் பணிகளைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் வலைதளங்கள்)
7. https://ssc.nic.in/ (மத்திய அரசின் ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் இணையதளம்)
8. https://www.ibps.in/ (அரசு வங்கிகளில் உள்ள வேலைவாய்ப்புகளை இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
9. https://rrcb.gov.in/ (ரயில்வேதுறையில் பணியாற்ற விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய வலைதளம்)
10. https://dot.gov.in/ (தகவல் தொழில்நுட்பம், டெலிகம்யூனிகேஷன் துறையில் உள்ள வேலைவாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள உதவும் வலைதளம்)
11. http://dgms.gov.in/ (சுரங்கத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகளை இந்த இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்)
12. https://fci.gov.in/

(உணவு கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகளுக்கான வலைதளம்)
இவற்றைப் போன்ற வேலைவாய்ப்புகளைப் பற்றி வெளிச்சம் பாய்ச்சுகிற ஏராளமான பல வலைதளக் கலங்கரை விளக்கங்கள் நிறைய உள்ளன. இளம் தலைமுறையினர் அவற்றைக் கண்டறிந்தால் வேலைவாய்ப்புக்கான வழிகள் கண்களில் தென்படு

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة