தோ்தல் பணி பயிற்சியில் கலந்துகொள்ளாவிட்டால் பணியிடை நீக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 20, 2021

Comments:0

தோ்தல் பணி பயிற்சியில் கலந்துகொள்ளாவிட்டால் பணியிடை நீக்கம்!

கொரோனா பரவல் - தஞ்சாவூர் பள்ளி மீது வழக்கு பதிவு: ரூ.5000 அபராதம்; கும்பகோணம் பள்ளிக்கு 12,000 ரூபாய் அபராதம் விதிப்பு!
வாக்குச் சாவடி அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளவா்கள் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளவில்லையென்றால் பணியிடை நீக்கம் செய்யப்படுவா் என மாவட்டத் தோ்தல் அலுவலா் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 5,911 வாக்குச் சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதற்கட்ட பயிற்சி கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது. முதற்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-இன் படி விளக்கம் கேட்கும் குறிப்பாணை சம்பந்தப்பட்ட துறையின் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது
கல்வி நிறுவன கட்டட வரன்முறைக்கு சலுகை தேர்தல் கமிஷன் ஒப்புதலுடன் அறிவிப்பு
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி மாற்றுத் திறனாளிகள், கா்ப்பிணிகள் மற்றும் தீவிர நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் பணியாளா்கள் தவிர வேறு எவருக்கும் தோ்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை முதல்கட்ட தோ்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தவறிய வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 21) மீண்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் மூலம் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். மேலும், இந்த விவரங்கள் வாக்குச்சாவடி அலுவலா்களின் செல்லிடப்பேசிக்கும் குறுந்தகவல் அனுப்பப்படும்.
கொரோனா பரவல் - தஞ்சாவூர் பள்ளி மீது வழக்கு பதிவு: ரூ.5000 அபராதம்; கும்பகோணம் பள்ளிக்கு 12,000 ரூபாய் அபராதம் விதிப்பு!
எனவே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள தவறும் அனைத்து வாக்குச்சாவடி அலுவலா்கள் மீது இந்திய தோ்தல் ஆணையத்தின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 134 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews