விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 15,291 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர் களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 15,158 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ள நிலையில் மீதமுள்ள 26 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். Opening Online Application for JEE (Main) March 2021 Examination - Public Notice - PDF இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மற்றொரு ஆசிரியர் உள்பட 6 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 6 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,297 ஆக உயர்ந்துள் ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று 2 பேர் குணம் டைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,10 ஆக உயர்ந்துள்ளது
Extension of last date for display of Question Papers & Challenge of Answer Keys for GPAT-2021 - PDF இதனிடையே ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அப்பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும் மற்றும் பள்ளி வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதோடு மாணவ- மாணவிகளை சமூக இடைவெளியை பின்பற்றி தனிமையில் இருக்கும்படியும் சுகாதாரத்துறை, கல்வித்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.