Breaking

Thursday, March 18, 2021

தேர்தல் பயிற்சிக்கு வர மறுத்த 17 ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு.

அசாம் மாநிலத்தில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்துகிறார்கள். ஆனால் பல ஆசிரியர்கள் தங்களுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி தேர்தல் பணிக்கு வர மறுத்துவிட்டார்கள் . அவர்கள் அதற்கான மருத்துவ சான்றிதழையும் மேல் அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இவ்வாறு மருத்துவ சான்றிதழ் அளித்தது சரியானது தானா ? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல ஆசிரியர்கள் தவறான முறையில் சான்றிதழ் பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து 17 ஆசிரியர்களை கட்டாய ஓய்வில் ( வி.ஆர் . எஸ் . ) செல்லும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் லாக்டவுன்? – ஹின்ட் கொடுத்த ராதாகிருஷ்ணன்! அதில் தேர்தல் பணி ஆற்ற முடியாத நிலையில் உங்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் , நீங்கள் ஆசிரியர் பணியையும் சரியாக செய்ய முடியாது. எனவே கட்டாய ஒய்வில் சென்று விடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. அரசு எடுத்துவரும் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வறிக்கை சமர்ப்பிக்க - பிஎச்டி மாணவர்களுக்கு டிச. 31 வரை அவகாசம் : பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog