இந்திய பார் கவுன்சில் தேர்வில் புதிய மாற்றம் அமல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 18, 2021

Comments:0

இந்திய பார் கவுன்சில் தேர்வில் புதிய மாற்றம் அமல்

இந்திய பார் கவுன்சில் நடத்தும் வழக்கறிஞர்களுக்கான தேர்வுக்கு புத்தகங்களை எடுத்து செல்லும் வழக்கம் மாற்றப்பட்டுள்ளதாகவும், புதிய நடைமுறை பின்பற்றப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அகில இந்திய பார் தேர்வு:
AIBE, அகில இந்திய பார் தேர்வு என்பது இந்தியாவில் சட்ட பயிற்சி செய்யும் வழக்கறிஞர்களின் திறமையை சோதிப்பதற்காக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ) நடத்தும் தேசிய அளவிலான தேர்வாகும். இறுதி ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம்.

ஆசிரியர்களுக்கு துறை ரீதியான தேர்வு

இந்த ஒருங்கிணைந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிலையான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தேர்வு எழுதாதவர்கள் தற்காலிக அடையாள அட்டை மட்டுமே பயன்படுத்த முடியும். பழைய நடைமுறை:
பார் கவுன்சில் தேர்வுகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் மூன்று மாவட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கு முன்னதாக தேர்வின் போது புத்தகங்களை எடுத்து சென்று எழுத தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

பள்ளியில் மயங்கி விழுந்த மாணவி பலியான சோகம்!

புதிய நடைமுறை:
இந்திய பார் கவுன்சில் தேர்வு வரும் மார்ச் 21ம் தேதி நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் தேர்வர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இனிவரும் தேர்வுகளின் போது தேர்வு அறைக்குள் புத்தகம் கொண்டு செல்ல தடை விதிப்பதாக இந்திய பார் கவுன்சில் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews