உரிமையை கேட்டால் அரியரா?: பழிவாங்கும் நோக்கில் பேராசிரியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، فبراير 17، 2021

Comments:0

உரிமையை கேட்டால் அரியரா?: பழிவாங்கும் நோக்கில் பேராசிரியர்கள்!

தொல்லியல் படிப்பு பயிலும் மாணவர்களிடம் சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் பழிவாங்கும் நோக்கில் நடந்துகொள்வதாக கூறி பாதிக்கப்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல்துறையில் பயின்றுவரும் 8க்கும் மேற்பட்ட மாணவர்களை 3ம் பருவத்தேர்வில் தேர்ச்சி அடைய விடாமல் செய்தும், சிலருக்கு குறைந்த மதிப்பெண்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

MSME (Micro, Small and Medium Enterprises) Policy - 2021 - PDF

இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் தகுந்த நடவடிக்கையுடன் விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்ய பொறுப்பு துறைத்தலைவரிடம் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொல்லியல்துறையை சேர்ந்த பேராசிரியர்கள் சவுந்தரராஜன், கருணாகரன் இருவரும் உரிமையை கேட்கும் மாணவர்கள் மீது பழிவாங்கும் வகையில் சில படங்களில் அரியர் தேர்வு வைத்திருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Samagra Shiksha - SPD to All CEOs - Online teacher Development Programme on ICT facilities - Level 2 — schedule for 4 days from 17.2.21 to 20.2.21 - reg

விடுதி பிரச்னை குறித்து கேள்வி கேட்டால், திசை திருப்பும் வகையில் மாணவர்களை பழிவாங்கி இருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாணவர்களை பழிவாங்கும் வகையில் அரியர் பட்டியல் வெளியிட்ட பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் தொல்லியல்துறை மாணவர்கள் விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வுகாணவும் அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். மேலும் விடைத்தாள்களை மூன்றாம் தேர்வரால் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة