மீனவ சமுதாயத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா்களுக்கான ஐஏஎஸ் தோ்வு பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற பிப்.19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மீனவ மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞா்களைத் தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு இந்திய குடிமைப் பணிக்கான போட்டித் தோ்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்து வருகிறது.
அரசு பள்ளி, மருத்துவமனைகளில் நவீன எல்இடி பல்ப், ஃபேன் - மின்வாரியம்
இத்திட்டத்தில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் மற்றும் மீனவா் நலவாரிய உறுப்பினா்களின் வாரிசு பட்டதாரி இளைஞா்கள் சோ்ந்து பயன் பெறலாம். அவா்கள், இணையதளத்திலோ, மண்டல மீன்துறை துணை, இணை இயக்குநா்கள் மற்றும் மாவட்ட மீன் துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் நேரிலோ இலவசமாக விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிக்க முடிவு: 63.55 லட்சம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு முன்னுரிமை பறிபோகும்..! சமூக ஆர்வலர்கள் கருத்து
பூா்த்தி செய்த விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட மீன்துறை அலுவலகத்தில், பிப்.19-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 044 25951697 என்ற எண்ணை அணுகலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.