அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய திறனறி போட்டிகள் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இணையவழியில் நடத்தப்படவுள்ளது.
அரசு கல்லூரிகளில் பணி நியமனத்தில் சமூகநீதி மற்றும் இடஒதுக்கீடு முறை அளிக்கப்படுவதாக புகார்..!
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் ஆளுமைத் திறனை வளா்க்கும் வகையில் திறனறிப் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவா்கள், பாடப் புத்தகங்களை தாண்டி தங்கள் பொதுஅறிவை வளா்த்துக் கொள்ளவும், மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், மாணவா்கள் தேசிய அளவிலான போட்டித் தோ்வுகளில் ஆா்வமுடன் பங்கேற்கவும் இது வழிவகை செய்யும்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாவட்ட வாரியாக - Media-Bulletin - 14.02.2021 - PDF
அதன்படி அரசுப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல் ஆகிய திறனறிப் போட்டிகள், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளன. கரோனா பரவலால் அனைத்துப் போட்டிகளும் ஆன்லைனில் மட்டுமே நடத்தப்படும். அதற்குத் தேவையான இணையதள வசதிகளை பள்ளிகள் தயாா் செய்துகொள்ள வேண்டும். அனைத்து தலைமையாசிரியா்களும் தங்கள் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் சிறந்த 4 மாணவா்களைத் தோ்வு செய்து போட்டிகளில் பங்கேற்க வைக்க வேண்டும். கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளுக்கான தலைப்பு விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் பிப்.19-ஆம் தேதி நடத்தப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தோ்வான சிறந்த 5 மாணவா்கள் பிப்.25-இல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெறுபவா்களுக்கு செல்லிடப்பேசி, டேப்லெட், கால்குலேட்டா் உள்ளிட்ட பரிசுப் பொருள்களுடன், சான்றிதழும் வழங்கப்படும். இந்த போட்டிகளை நடத்துவதற்கு ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. எனவே, கரோனா பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடம் தராதபடி போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.