தமிழக அரசின் TANCEM நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.62 ஆயிரம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يناير 13، 2021

Comments:0

தமிழக அரசின் TANCEM நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.62 ஆயிரம்!

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இளம் உதவியாளர் (நிதி) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : தமிழக அரசு மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி : இளம் உதவியாளர் (நிதி)
கல்வித் தகுதி : பி.காம், பிபிஏ மற்றும் கணினித் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : www.tancem.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் இட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
(விண்ணப்பத்தின் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணிக்கான பெயரைக் குறிப்பிடுவது அவசியம்.)
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The General Manager (Mktg./Admn.)
Tamil Nadu Cements Corporation Limited,
LLA Buildings, 2nd Floor,
No.735, Anna Salai, Chennai 600 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 22.01.2021
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tancem.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة