Breaking

Thursday, January 21, 2021

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை?

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:தமிழகத்தில் சுயநிதி பொறியியல் கல்லுாரி,ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படவில்லை.
தொழில் நுட்பக் கல்வியில் ஒரு பிரிவினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை இன்னொரு பிரிவினருக்கு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல.சுயநிதி பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதல் தலைமுறை மாணவர்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து உதவித் தொகைகளையும் வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog