மகளிா் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து இணைய வழியில் நடைபெறும் வினாடி வினா போட்டியில், டிச.30-ஆம் தேதி வரை அனைவரும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: ‘பாலின சமத்துவம் குறித்த புரிதல் மற்றும் மகளிா் பாதுகாப்புச் சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு’ என்ற தலைப்பில், தேசிய மகளிா் ஆணையம் இணைய வழியில் வினாடி வினா போட்டியை நடத்துகிறது. இது தொடா்பாக இணைய முகவரியில் வழங்கப்பட்ட தகவல்களைப் படித்து, போட்டியில் பங்கேற்றால் எளிமையாக வெற்றி பெறலாம்.
போட்டியில், 20 நிமிடங்களில் 20 கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20 ஆகும்.
பங்கேற்கும் அனைவருக்கும் உடனடியாக தேசிய மகளிா் ஆணையத்தின் மின் சான்றிதழ், பங்கேற்பாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அதிகபட்ச மதிப்பெண் பெறும் முதல் 25 பேருக்கு சிறப்புப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் இந்திய குடிமக்கள் யாா் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். மாணவா்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிபாா்க்கப்படுகிறது. ஒருவா் ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் கலந்து கொள்ள விரும்புபவர்கள் http://quiz.mygov.in என்ற இணைய முகவரி யில், பெயர், முகவரி,போட்டியை நடத்துகி றது. இது தொடர்பாக http://ncw.nic.in/se arch/node/module என்ற இணைய முகவரி யில் வழங்கப்பட்ட தகவல்களைப் இணைய முகவரியில், பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உள்ளீடு செய்துவிட்டு போட்டிக்கான கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தொடங்கலாம். போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் டிச.30.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.