Breaking

Sunday, December 27, 2020

மாவட்ட நீதிபதிகள் தேர்வு முறை மாற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மாவட்ட நீதிபதிகள் தேர்வு முறையை மாற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை:தமிழகத்தில், 32 மாவட்ட நீதிபதிகளை தேர்வு செய்ய, தமிழக அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் இணைந்து, முதல்நிலை போட்டித் தேர்வை நடத்தின. இதில், 2,500 பேர் தேர்வு எழுதினர். இவர்களில், ஆறு பேர் மட்டுமே, தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தேர்வு முறையில் உள்ள குழப்பங்களே, இதற்கு காரணம்.
மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்கான, தேர்வு வடிவமே தவறாகும். நீதிபதிகள் நியமனத்திற்கு, போட்டி தேர்வுகளை நடத்தாமல், தகுதித் தேர்வுகளை நடத்தியது தான், அனைத்து பாதிப்புகளுக்கும் காரணம் ஆகும். தவறான பதில்களுக்கு, 'மைனஸ்' மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால், அதிகம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த தேர்வு முறையை மாற்ற வேண்டும். போட்டி தேர்வுகள், தேர்வர்களின் திறமையை மதிப்பிடும் நோக்கத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பவர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.மாவட்ட நீதிபதிகள் தேர்வை, இதே முறையில் நடத்தினால், அப்பணிக்கு தேர்வு எழுதுவோர் இடையே, மன அழுத்தமும், மன உளைச்சலும் ஏற்படக்கூடும். ஒரு கட்டத்தில் இத்தேர்வில் பங்கேற்க, எவரும் முன்வர மாட்டார்கள். எனவே, புதிய தேர்வு முறையிலிருந்து, பழைய முறைக்கு மாற வேண்டும். இப்போது நடத்தப் பட்டு உள்ள தேர்வில், மைனஸ் மதிப்பெண்களை நீக்கி, புதிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பட வேண்டும்.அவர்களில் இருந்து, ஒரு காலியிடத்துக்கு, 15 பேர் வீதம், 480 பேர் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, முதன்மை தேர்வுக்கு அழைக்கப்பட வேண்டும். முதன்மை தேர்வு எழுதியவர்களில் இருந்து, ஒரு பணியிடத்திற்கு, மூவர் வீதம், 96 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog