கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 05, 2020

Comments:0

கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னைஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் அகழ்வுகள் பட்டயப்படிப்பு 2021 ஜனவரி திங்கள் முதல் தொடங்கப்பட உள்ளது.இவ்வகுப்பில் கல்வெட்டியல் தொல்லியல் ,தமிழக வரலாறு ,பண்பாடு, கலை இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும் கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் அதற்கான பயிற்சியும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் பட்டயப்படிப்பு சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் ஓராண்டு காலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பட்டய படிப்புக்கான விண்ணப்பத்தினை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பயிற்சிக்கான சேர்க்கை கட்டணம் 2,500 ரூபாய் ஆகும். வயது வரம்பு ஏதும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 2020 டிசம்பர் 28ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆகும். வகுப்புகள் 2021 ஜனவரி திங்கள் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் 044-22542992,9500012272 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021- 2022 ஆம் ஆண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு விண்ணப்பம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews