Breaking

Friday, December 18, 2020

2021 தொடக்கத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு: கேரள அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கேரளத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கேரளத்தில் தொடக்கத்தில் கட்டுப்படுத்தப்பட்ட கரோனா தொற்றின் எண்ணிக்கை பின் அதிகரிக்கத் தொடங்கியது. அதன்காரணமாக பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியானாலும் கேரளத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளிப்போனது. இந்நிலையில் வியாழக்கிழமை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 10 மற்றும் 12 வகுப்புகளும், கல்லூரிகளின் இறுதி ஆண்டு மற்றும் முதுகலை வகுப்புகளும் மீண்டும் தொடங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. எனினும் இதர வகுப்புகளைத் தொடங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog