நிஃப்ட் நுழைவுத் தோ்வு: ஜன.21 வரை விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 21, 2020

Comments:0

நிஃப்ட் நுழைவுத் தோ்வு: ஜன.21 வரை விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தும் நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு வரும் ஜன.21-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் நிஃப்ட் எனப்படும் தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் செயல்படுகிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் இளங்கலை ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட ஏராளமான படிப்புகளைப் படிக்கலாம். ஐஐடியில் பொறியியல் படிப்பதற்கு இணையான படிப்புகள் இவை. மத்திய அரசின் நிஃப்ட் கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி, பெங்களூா் உள்பட நாட்டின் 16 முக்கிய நகரங்களில் அமைந்துள்ளன. இவற்றில் உள்ள 2,370 இடங்களுக்காக, தேசிய அளவிலான நுழைவுத் தோ்வு வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறுகிறது. பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களுடன் தோ்ச்சி பெற்றவா்களும், பொறியியல் பட்டயப் படிப்பு முடித்தவா்களும் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23-க்கு உட்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில், நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு வரும் ஜன.21ஆம் தேதி வரையும் கூடுதல் கட்டணம் செலுத்தி ஜன.22 முதல் 24-ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம். திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 25 முதல் 28-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நிஃப்ட் நுழைவுத் தோ்வுக்கு இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews