மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 18, 2020

Comments:0

மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆணை :
2020-2021ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “ பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்ரி லை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம் , அலுவலகம் தொடர்பான பணிகளை மேற் ெகாள்வதற்கு போதுமான அளவில் ஆசிரியரல்லா பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையின் அடிப்படையில் உதவியாளர்கள் , இளநிலை உதவியாளர்கள் அல்லது பதிவறை எழுத்தர்கள் பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ .12.84 கோடி செலவில் தோற்றுவிக்க வழிவகை செய்யப்படும். ”
அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் நிலை மேம்படவும் , ஆசிரியர்களது நலன் மற்றும் பணப்பயன்கள் பெற்றளித்தலில் தொய்வற்ற நிலை ஏற்படுத்தவும் , தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் முழுக் கவனமும் செலுத்த ஏதுவாகவும் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்கள் அனுமதிப்பது அவசியமாகிறது எனவும் , மேற்படி ஆசிரியரல்லாப் பணியிடங்கள் அனுமதிப்பது குறித்து மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
JA & RC Post Creation GO No :125 , Date : 16.12.2020 - Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews