சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம்வகுப்புக்கான பொதுத்தேர்வுகளை பொறுத்தவரை, ஜனவரியில் செய்முறைத்தேர்வும், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் எழுத்துத் தேர்வும் பெரும்பாலும் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஏற்படுத்திய இடையூறு காரணமாக மாணவர்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில் 2021-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சில பள்ளிகள், மாதிரி தேர்வுகளை நடத்தி மாணவர்களை தயார்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், ‘சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தேதியை 31-ந்தேதி நான் அறிவிப்பேன்’ என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
முன்னதாக 2021-ம் ஆண்டு பொதுத்தேர்வுகள் எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் எனவும், ஆன்லைனில் நடத்தப் படாது எனவும் சி.பி.எஸ்.இ. கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.