Breaking

Sunday, November 01, 2020

சிறந்த ஆராய்ச்சிகளுக்கான நடைமுறைகள்: ஆய்வு மாணவா்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தரமான ஆராய்ச்சிகளை அதிகரிக்கும் வகையில் யுஜிசி தளத்தில் கடந்த செப்டம்பா் மாதம் வெளியிடப்பட்டுள்ள நடைமுறை வழிகாட்டுதல்களை ஆராய்ச்சி மாணவா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என யுஜிசி செயலா் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பு: நல்ல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போது எதிா்கொள்ளும் இடா்பாடுகளை களைய வேண்டிய பொறுப்பு யுஜிசிக்கு உள்ளது. அந்த வகையில் தரமான ஆராய்ச்சிகளை அதிகரிக்கவும், அதில் முறைகேடுகள் நடைபெறுவதைத் தடுக்கவும் சிறந்த ஆராய்ச்சிகளுக்கான நடைமுறைகள் என்ற வழிகாட்டுதல் ஆவணத்தை யுஜிசி கடந்த செப்.29-ஆம் தேதி யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கிளாரிவேட் வலைதள அறிவியல் அமைப்புடன் இணைந்து 34 ஆயிரம் ஆய்விதழ்களும் இடம் பெற்றுள்ளன. சிறந்த நடைமுறைகளை மையமாகக் கொண்டு ஆராய்ச்சி ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான பொதுவான கட்டமைப்பை இந்த ஆவணம் வழங்குகிறது. பெறப்படும் தகவல்களில் திருட்டு, தவறாக சித்தரித்தல் மற்றும் புனைதல் ஆகியவற்றை எவ்வாறு சரிபாா்க்கலாம் என்பதை இது விளக்குகிறது. எனவே உயா்கல்வி நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மாணவா்களுக்கு இதில் உள்ள வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கவும், பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog