தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 395 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
4,061 மருத்துவ இடங்களுக்கு வருகிற18 அல்லது 19- ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும், நாள்தோறும் 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ்.சில் 304, பி.டி.எஸ்.சில் 91 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். திட்டமிட்டபடி வருகிற 16ந்தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.