சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் பேராசிரியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 17, 2020

Comments:0

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் திண்டுக்கல் பேராசிரியர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உலக அளவில் முதல் 2 சதவீதம் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலை பேராசிரியர்கள் ஏழு பேர் இடம் பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலை ஆராய்ச்சியாளர்கள், 'ரிசர்ச் இன்டலிஜென்ஸ் மற்றும் சைடெக் ஸ்ட்ராட்டஜிஸ்' இணைந்து ஆராய்ச்சி தரவுகளின் அடிப்படையில் பட்டியல் வெளியிட்டுள்ளது.இதில் இடம் பெற்றுஉள்ள 1.60 லட்சம் விஞ்ஞானிகளில் 2314 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இதில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலை பேராசிரியர்கள்7 பேர் இடம் பெற்றுஉள்ளனர். இவர்களில் கணிதத்துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியம் 'Fuzzy Logic' மற்றும் 'நியூரல் நெட்வொர்க்' ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்.இயற்பியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன் 'Dye-Sensitized solar cell' ஆராய்ச்சிகளில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் மாரிமுத்து, வெள்ளை ஒளி, கதிர் வீச்சு தடுப்பு மற்றும் போட்டோனிக்ஸ் உபயோகம் கொண்ட கண்ணாடி பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் பங்களித்துள்ளார். வேதியியல் துறை பேராசிரியர் சேதுராமன்,மேற்பரப்பு பார்க்கும் முறைகள், சூப்பர் ைஹட்ரோபோபிக் மெட்டீரியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்.பேராசிரியர் மீனாட்சி, குடிநீரில் இருந்து புளோரைடு மற்றும் இதர நச்சுத்தன்மை கொண்ட தனிமங்களை பயோ கம்போஸ்ட் மெட்டீரியல்ஸ் மூலம் நீக்கும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். பேராசிரியர் ஆபிரகாம் ஜான், நேனோ மெட்டீரியல் அடிப்படையிலான சென்சார் தொழில்நுட்பங்களை உருவாக்கும் ஆராய்ச்சியும், பேராசிரியர் சிவராமன், பயோ-இமேஜிங் உபயோகம் கொண்ட மூலக்கூறுகள் தொடர்பான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். விஞ்ஞானிகளை பல்கலை வேந்தர் அண்ணாமலை, துணை வேந்தர் சுப்புராஜ், பதிவாளர் சிவகுமார் ஆகியோர் பாராட்டினர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews