அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, தமிழக அரசு உட்பட அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் அவருக்கு எதிரான விசாரணை; மற்றொரு பக்கம், அவருக்கு ஆதரவாக போராட்டம். 'சுரப்பா நேர்மையானவர், ஆளும் கட்சியினருக்கு ஒத்துழைக்காத காரணத்தால் பழி வாங்கப்படுகிறார்' என்கின்றனர்.
இது தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர். மிகவும் நேர்மையானவர் என அனைவராலும் கூறப்பட்ட இந்த தலைமை நீதிபதி, அரசின் எந்த பதவியையும், தன் பதவி ஓய்விற்கு பின் ஏற்கவில்லை.
'பல்கலை துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்கும் கமிட்டியின் தலைவராக உங்களை நியமிக்க உள்ளோம். நீங்கள் இந்த குழுவில் இருந்தால், அதற்கு ஒரு மரியாதையும், பெருமையும் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபர் நேர்மையானவராக இருப்பார்' என, நீதிபதியிடம் கவர்னர் கூறினாராம். ஆனால் இதை ஏற்க மறுத்து விட்டாராம் அந்த நீதிபதி.
சுரப்பா விவகாரம், தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், அந்த தலைமை நீதிபதி சமீபத்தில் கூறுகையில், 'நான் அன்று எடுத்த முடிவு எவ்வளவு சரி என இப்போது புரிகிறது. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் ஏகப்பட்ட அரசியல் உள்ளது. படிப்பு விவகாரத்தில் ஊழல் புகுந்தால் மாணவர்களின் கதி என்னவாகும்' என, வருத்தப்பட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.