தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 29, 2020

Comments:0

தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ - மாணவியருக்கு, காசோலைகளை வழங்கி முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டினார். தேசிய, சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறும் வகையில், தமிழக வீரர்கள், வீராங்கனையருக்கு அரசு சார்பில், தங்கும் விடுதியுடன் கூட, பயிற்சி அளித்தல்; ஊக்கத் தொகை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 2018 - 19ம் ஆண்டுக்கான, 64வது தேசிய பள்ளி விளையாட்டு போட்டிகள், 14வயது, 17 வயது, 19 வயது என, மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில், தமிழகத்தை சேர்ந்த, 266 மாணவர்கள், 28 விளையாட்டுகளில், 88 தங்கம், 107 வெள்ளி, 109 வெண்கல பதக்கங்களை பெற்றனர்; 306 மாணவியர், 29 விளையாட்டுகளில், 135 தங்கம், 100 வெள்ளி, 113 வெண்கல பதக்கங்கள் என, மொத்தம், 572 மாணவ - மாணவியர், 652 பதக்கங்களை பெற்றனர். இப்போட்டிகளில் தங்கம் வென்றவர்களுக்கு, தலா, 2 லட்சம் ரூபாய்; வெள்ளி வென்றவர்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய், வெண்கலம் வென்றவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி, இப்போட்டிகளில் வெற்றிப் பெற்ற, சென்னையை சேர்ந்த, 14 மாணவ - மாணவியருக்கு, 54 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் இ.பி.எஸ்., நேற்று வழங்கினார். பெல்ஜியம், ஐஸ்லாந்து நாடுகளில் நடந்த போட்டிகளில் வெற்றிப் பெற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு, 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலர் சண்முகம், விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் தீரஜ்குமார், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews