திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் விதி 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி தெரிவித்ததாவது:
‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடல் வரிகளுக்கேற்ப தமிழகத் தில் உயர்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஜெயலலிதா ஆட்சியில் அரசு கலைக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பிற உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன.
அவரது வழியில் செயல்படும் அதிமுக அரசும், உயர்கல்வி நிறுவனங்களை தொடர்ந்து உருவாக்கியும், பல உயர்கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது. இதனால் தமிழக கிராமப்புறங்கள், மூலைமுடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவு நனவாகி உள்ளது. இதனால் தான், தேசிய அளவில் 26.3 சதவீதமாக இருக்கும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை, தமிழகத்தில் 49 சதவீதமாக உள்ளது.
சட்டத்துறை அமைச்சர் மற்றும் விழுப்புரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, திருவள் ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு புதியபல்கலைக்கழகம் உருவாக் கப்படும். நடப்பு ஆண்டிலேயே இது செயல்படத் தொடங்கும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், “விழுப்புரத்தில் புதிய பல்கலைக் கழகம் அமைப்பதை நான் எதிர்க்க வில்லை. திமுக ஆட்சியில் வேலூரில், அதாவது எனது காட்பாடி தொகுதியில் திருவள்ளு வர் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்டது. இன்னமும் அதில் முழுமையாக வசதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில், பல்கலைக்கழகத்தை பிரிப்பதை ஏற்க முடியாது’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆதங்கப்பட அவசியமே இல்லை. கல்விக்கு முன்னுரிமை கொடுக்கத்தான் இந்த பல்கலைக்கழகம் பிரிக்கப்படு கிறது. பிற்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத் தின் அடிப்படையில், நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுகிறதே தவிர, வேறு எதுவும் இல்லை.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை இணைத்து புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது. இந்த புதிய பல்கலைக் கழகத்துக்கு விரைவில் பெயர் சூட்டப்படும்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.