தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள் , அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் , அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள் , அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர விழையும் மாணாக்கர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து , பதிவு செய்த அனைத்து மாணாக்கர்களுக்கும் சமவாய்ப்பு எண் ( Random Number ) 26.08.2020 அன்று வழங்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து , கொரோனா நோய்த்தொற்று ( COVID - 19 ) சூழ்நிலையின் காரணமாக மாணாக்கர்களை நேரில் அழைக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் வாயிலாக திறம் பெற்ற பேராசிரியர்கள் , வருவாய்த் துறை அலுவலர்கள் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் , முன்னாள் இராணுவத்தினர் நல அலுவலர் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்புடன் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது . பெரும்பான்மையான மாணாக்கர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது . இன்னும் சில மாணாக்கர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால் , மாணாக்கர்களின் நலன் கருதி 17.09.2020 அன்று வெளியிடப்பட வேண்டிய தரவரிசைப்பட்டியல் 25.09.2020 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது .
மேலும் , மாணாக்கர்கள் www.tneaonline.org ETT இணையதளத்தில் தங்களின் account- ல் login செய்து தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா என்பதை உறுதிசெய்து கொள்ளலாம் . மாணாக்கர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-22351014 மற்றும் 044-22351015 என்ற தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.