புதுவை ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது.
புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, மருத்துவக் கல்வி பயில ஜிப்மர் நிர்வாகம் தனியாக நுழைவுத் தேர்வை நடத்தி, அதன் மூலம் மாணவர்கள் சேர்க்கையை நடத்தி வந்தது.
நிகழாண்டு நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது.
இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான (2020) மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே நடத்தும்.
எனவே, நிகழ் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புக்குத் தனித் தேர்வோ, கலந்தாய்வோ ஜிப்மர் சார்பில் நடத்தப்படாது. மாணவர்கள் கூடுதல் விவரங்களை http://www.mcc.nic.in/ என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.