கல்லூரிக்கல்வி - 2020-21-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணை - PDF - அரசாணை (வாலாயம்) எண்.69 - நாள் 10.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 20, 2020

கல்லூரிக்கல்வி - 2020-21-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணை - PDF - அரசாணை (வாலாயம்) எண்.69 - நாள் 10.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லூரிக் கல்வி - 2020-21-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. உயர்கல்வி (ஜி1) துறை
நாள் 10.09.2020 சார்வரி, ஆவணி-25, திருவள்ளுவர் ஆண்டு , 2051.
படிக்கப்பட்டவை:
1. அரசாணை (வாலாயம்) 78, உயர்கல்வி (ஜி1) துறை, நாள் 03.06.2019.
2. கல்லூரிக் கல்வி இயக்குநர் கடித ந.க.எண்.18821/எம்2/ 2020, நாள் 07.09.2020. ஆணை :
மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2019-20-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும் மாணவ / மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தும் இக்கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு, சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிடப்பட்டது.

2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகாமையிலுள்ள / சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களிலிருந்தும் நகராட்சியிலிருந்தும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவ / மாணவிகள் அரசு கல்லூரிகளில் அதிகளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர் என்றும் இம்மாணவ மாணவிகள் அதிக கல்விக் கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயில மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும், மேலும் அரசு கல்லூரிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மாணவ மாணவியர்களின் நலன் கருதி 2020-21-ஆம் கல்வியாண்டில் கூடுதலாக தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும், மாணவ மாணவியர்களை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார். 3. கல்லூரிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை பரிசீலித்த அரசு, 2020-21-ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டிற்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 20% கூடுதலாகவும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாகவும் மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது. இக்கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)
அபூர்வா அரசு முதன்மைச் செயலாளர்
பெறுநர்
கல்லூரிக் கல்வி இயக்குநர், சென்னை -6
அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் (கல்லூரிக் கல்வி இயக்குநர் வழியாக).
முதல்வர், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (கல்லூரி கல்வி இயக்குநர் வழியாக).
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சரின் முதுநிலைநேர்முக உதவியாளர், சென்னை -9.
அரசு முதன்மைச் செயலாளரின் நேர்முக உதவியாளர், உயர்கல்வித்துறை, சென்னை-9.
இ.கோ./உதிரி //ஆணைப்படி அனுப்பப்படுகிறது// 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews