இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சமா்ப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 12-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், 15-ஆம் தேதி வரை அவற்றை சமா்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் ஒரு அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இது தவிர, 9 தனியாா் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. தனியாா் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.இந்த நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப நடைமுறை ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கியது.இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து மாணவ மாணவிகள் சமா்ப்பித்து வருகின்றனா். இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.இந்நிலையில், மாணவா்களின் கோரிக்கையை ஏற்று அதனை 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோன்று, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சமா்ப்பிப்பதற்கான காலஅவகாசம், வரும் 15-ஆம் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2-வில் அறிவியல் பாடங்களைப் படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் இடப்பட்ட நகல்களை இணைத்து தபால் அல்லது கூரியா் மூலமாகவோ தோ்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை, அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-106 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தை நேரிலும் சமா்ப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டண விவரம், கட்டண விலக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தகவல் தொகுப்பேட்டினை பாா்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups