நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் உதித் சூர்யா, ரிஷிகாந்த் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்ட மாணவர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களை ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா சிக்கினார். இவர்தான் நீட் முறைகேட்டில் முதலில் சிக்கியவர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் இடைத்தரகர்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடந்தது அம்பலமானது. உதித் சூர்யாவைத் தொடர்ந்து ராகுல், பிரவீன், இர்பான் ஆகிய மாணவர்களும் பிரியங்கா என்ற மாணவியும் கைதாகினர். அந்த மாணவர்களுடன் சேர்த்து அவர்களது தந்தைகளையும் கைது செய்ததோடு, முறைகேடு செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் கைது செய்தனர். இந்த வழக்கு பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
பல மாணவர்களின் மருத்துவப் படிப்பை கனவாக்கும், இத்தகைய முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்த சான்றிதழ்களை திருப்பி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. மாணவர்கள் உதித் சூர்யா, ரிஷிகாந்த் தொடர்ந்த அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ்களை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். எனினும் 2 மாணவர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களை மட்டும் கொடுக்க அனுமதி அளித்த நீதிபதிகள், பிரமாண பத்திரம் தாக்கல் செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups