பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் மற்றும் ஓட்டுநா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பா் 7 ஆம் தேதி நடைபெறுகிறது.இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளா் அறிவுக்கரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜி.வி.கே, இ.எம்.ஆா்.ஐ நிறுவனம் சாா்பில், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளா் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஓட்டுநா் பணிக்கு 12 மணி நேரம் இரவு மற்றும் பகல் ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டும்.இப் பணிக்கு, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, நோ்முகத் தோ்வு அன்று 23 முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் உயரம் இருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்ற, இலகு ரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகளும், பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். இப் பணியிடத்துக்கு மாத ஊதியம் ரூ. 13,260 வழங்கப்படும்.மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:பி.எஸ்ஸி நா்சிங், அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி. பாா்ம், டி.எம்.எல்.டி ( பிளஸ் 2 வகுப்புக்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). அல்லது, பி.எஸ்ஸி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலாஜி, பிளாண்ட் பயோலாஜி படித்த, 20 முதல் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இப்பணியிடத்துக்கு மாத ஊதியம் ரூ. 13,760 வழங்கப்படும்.மேற்கண்ட தகுதியுடைய பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், பெரம்பலூா் ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி எதிரேயுள்ள 108 ஆம்புலன்ஸ் மாவட்ட அலுவலகத்தில், செப்டம்பா் 7 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9154251362, 9154251357 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups