பிளஸ் 2 மாணவர்களுக்கான துணைத் தேர்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, சி.பி.எஸ்.இ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ், பிளஸ் 2 படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் தோல்வி அடைந்த மற்றும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்த மாணவர்களுக்காக, துணைத் தேர்வுகள் விரைவில் நடக்கவுள்ளன.'கொரோனா காலத்தில்தேர்வை நடத்துவது, மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, தேர்வை ஒத்திவைக்க வேண்டும்' என, சில மாணவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உத்தரவு
இந்த மனு, நீதிபதிகள்,ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கியஅமர்வு முன், நேற்றுவிசாரணைக்கு வந்தது.அப்போது, சி.பி.எஸ்.இ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியதாவது:துணைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க, போதிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் படும்.தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். 40 மாணவர்கள் தேர்வு எழுத வசதியான அறையில், 12 மாணவர்களை மட்டும் அமர வைத்து தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.இந்த மாதத்துக்குள், தேர்வு நடத்தப்படும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தேர்வை ஒத்திவைக்கக்கோருவது சரியான செயல் அல்ல. இவ்வாறு, அவர் வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:விளக்கம்தேர்வை நடத்த வேண்டாம் என்றால், அதற்கு பதிலாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மனுதாரர் தரப்பு விளக்க வேண்டும். இது குறித்து மனுதாரர் தரப்பில் விளக்கமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை, வரும், 10க்கு ஒத்தி வைத்தனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U