UPSC சிவில் சர்வீஸ் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 01, 2020

UPSC சிவில் சர்வீஸ் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கியத் தேர்வுகளை நடத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று முதல் 6 ஆம் தேதி வரை ஜேஇஇ தேர்வும், செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற உள்ளன. இதையடுத்து, மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு 2021 ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முதல் 5 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews