1 லட்சம் பணியிடங்கள் காலி - மத்திய அரசு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 22, 2020

Comments:0

1 லட்சம் பணியிடங்கள் காலி - மத்திய அரசு அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
துணை ராணுவப் படைகளில் சுமார் 1 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழத்துபூர்வமாக நேற்று அளித்த பதிலில் கூறியதாவது:
நாட்டில் உள்ள துணை ராணுவப் படைகளில் தற்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் எல்லை பாதுகாப்புப் படையில் அதிகபட்சமாக 28,926 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதற்கு அடுத்தப்படியாக, சிஆர்பிஎப் படையில் 26,506 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, சிஐஎஸ்எப் படையில் 23,906, சீமா சஷாத்ரா படையில் 18,643, அசாம் ரைபிள்ஸ் படையில் 7,328, இந்தோ - திபெத் போலீஸ் படையில் 5,784 என காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்தப் பணியிடங்களை துரிதமாக நிரப்பும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் உள்ளிட்ட மத்திய ஆயு தப்படைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு சார் பில் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவிக் கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உள்துறை இணைய மைச்சர் நித்யானந்த்ராய் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: எல்லைப் பாதுகாப்புப் படையில் பிஎஸ்எஃப் அதிகபட்சமாக 28,926 காலியிடங்கள் உள்ளன. மத் திய ரிசர்வ் போலீஸ் படையில் சிஆர்பிஎஃப் 26,506 காலியிடங்களும், சிஐஎஸ்எஃப் படையில் 23,906, எஸ்எஸ்பி படை யில் 18,643, ஐடிபிஐ படையில் 5,784, அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையில் 7,328 காலிப்பணியிடங்கள் உள்ளன.
ஓய்வு பெற்றது, பதவி விலகல், பணியின்போது மரணம், புதிய பணி யிடங்கள் உருவாக்கப்பட்டது உள்ளிட்ட போன்ற காரணங்களால் காலிப்பணியிடங்கள் அதிகமுள்ளன. அதிலும் கான்ஸ்டபிள் நிலை யிலான பணியிடங்களே அதிகம் நிரப்ப வேண்டியுள்ளன. இப்போது, 60,210 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக் கைகள் தொடங்கியுள்ளன. இதுதவிர 2,534 சப்-இன்ஸ்பெக்டர், 330 துணை காமாண்டன்ட் ஆகிய பணியடங்களும் நிரப்பப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews