மாநகர போக்குவரத்து கழக ஐடிஐயில் சேர்வதற்கு தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, எம்டிசி மேலாண் இயக்குநர் கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 1984ம் ஆண்டு முதல் தொழில் பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) கம்மியர் (மோட்டர் வாகனம்) மத்திய அரசின் அங்கிகாரம் பெற்று குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், இதுவரையில் 1,207 மாணவர்கள், அனுபவம் வாய்ந்த பயிற்சி வல்லூநர்கள் மூலம் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். இங்கு பயிலும் மாணவர்களுக்கு போக்குவரத்து கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள்.
தொடக்க காலத்தில் குறைந்த அளவு இடங்களில், போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு மட்டும் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு முதல் மாணவர்களின் சேர்க்கைக்கு பணியாளர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு தவிர, எஞ்சியுள்ள இடங்களுக்கு வெளி மாணவர்கள் சேர்க்கை அனுமதிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 72 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. நடப்பு ஆண்டு (2020) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி காலம் இரண்டு ஆண்டுகள். விண்ணப்ப படிவங்களை பெறுவதற்கு, ‘முதல்வர், மாநகர போக்குவரத்து கழக தொழிற் பயிற்சி நிலையம், மாநகர போக்குவரத்து கழக பயிற்சி நிலைய வளாகம், காந்தி நகர், குரோம்பேட்டை, சென்னை-600 044 என்ற முகவரியிலும், 044-29535177 மற்றும் 9445030597 என்ற எண்களிலும், mtciti591@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த விண்ணப்ப படிவத்தினை www.mtcbus.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அளிக்க வேண்டிய கடைசி தேதி 30.9.2020 ஆகும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups