கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் 71 சதவீத குழந்தைகளுக்கு டிஜிட்டல் கல்விக்கான வாய்ப்புகள் இல்லை என்றும் இதன் காரணமாக பலர் படிப்பை விட்டு குழந்தைத் தொழிலாளர்களாக மாறக்கூடிய அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
மே மாதம் முதல் ஜூலை வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா முழுவதும் 14 சதவீத பள்ளி மாணவர்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் கல்வியைத் தொடர முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தின் நிலைமை பரவாயில்லை என்றும் அந்த மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.