மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.206 கோடி நிதி: உயர்கல்வி நிதி நிறுவனம் ஒதுக்கீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 20, 2020

மத்தியப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.206 கோடி நிதி: உயர்கல்வி நிதி நிறுவனம் ஒதுக்கீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வி நிதி நிறுவனம் ரூ. 206.94 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குர்மீத் சிங் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்தியக் கல்வி அமைச்சக உயர்கல்வி நிதி நிறுவனம் (ஹெஃபா) புதிய கட்டிடங்கள் மற்றும் கூடுதல் கட்டிடங்களை நிர்மாணிக்க புதுவை பல்கலைக்கழகத்துக்கு ரூ. 206.94 கோடி நிதியை அனுமதித்துள்ளது. அதன் மூலம் விரிவுரை வளாகம், மாணவ, மாணவியருக்கான விடுதிகள், ஆராய்ச்சி மையங்கள், பணியாளர்கள் குடியிருப்பு போன்றவை அமைக்கப்படும். இந்த மானியம் புதுச்சேரியில் உள்ள பிரதான வளாகம், காரைக்கால் மற்றும் அந்தமான் வளாகங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். புதுச்சேரியில் உள்ள பிரதான வளாகத்தில், தற்போதுள்ள கட்டிடங்களுக்குக் கூடுதல் இடம், கூடுதல் சிறுவர் மற்றும் பெண்கள் விடுதிகள், கூடுதல் பணியாளர்கள் குடியிருப்பு ஆகியவை பலப்படுத்தப்படும். காரைக்கால் வளாகத்தில் ஒரு புதிய விடுதி அமைக்கப்படும். அந்தமான் வளாகத்திலும், மாணவர்களுக்குப் புதிய விடுதி அமைக்கப்படும். கூடுதலாக, பல்கலைக்கழக மானிய குழுவானது புதுவை பல்கலைக்கழகத்திடம் ரூ. 90 கோடிக்கு கூடுதல் திட்டங்கள் சம்மந்தமான வரைவறிக்கையினை உயர் கல்வி நிதி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் தொற்று, தொடர்பு கொள்ள முடியாத மற்றும் அரிதான நோய்கள் குறித்த ஆராய்ச்சியை விரிவுபடுத்த புதிய நவீன ஆய்வக வசதிகளுடன் வைராலஜி மற்றும் மருந்தியலில் புதிய படிப்புகளைத் தொடங்க பல்கலைக்கழக மானிய குழுவுக்கு ஏற்கனவே திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. புதிய கல்வி கொள்கை 2020-க்கு இணங்க, பல்கலைக்கழக மானிய குழு வழங்கிய புதிய பாடத்திட்ட வழிகாட்டுதல்களின்படி அனைத்து கல்வித் திட்டங்களுக்கான பாடத்திட்டங்களும் திருத்தப்பட்டு, முறையாகப் புதுப்பிக்கப்படும். வளாகத் திட்டங்களில் சேர முடியாதவர்களுக்கு இணையவழிக் கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, இதன் மூலம் இந்த நேரடிக் கல்வித் திட்டங்களால் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயனடைவார்கள். தற்போது, ஏறக்குறைய 50,000 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுக்கு விண்ணப்பித்துள்ளனர், அதில் ஒவ்வொரு ஆண்டும் 3,000 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகிறார்கள். புதுவை பல்கலைக்கழகத்திலுள்ள தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறையின் மூலம் ஒவ்வொரு துறைகளிலும் குறைந்தது இரண்டு அதிநவீன வகுப்பறைகள் உருவாக்கப்படும். இணையவழிப் படம் நேரடியாக பல்கலைக்கழக இணையதளத்தில் ஒளிபரப்பப்படும். அதனைப் பதிவு செய்து எதிர்காலக் குறிப்புக்குப் பயன்படுத்தப்படும். புதுவை பல்கலைக்கழக வளாகத்தை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்த, மாணவர் மற்றும் ஆசிரிய பரிமாற்றத் திட்டங்கள், ஆராய்ச்சி விரிவாக்க நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குத் திட்டமிட்டுள்ளோம். ஓரிரு ஆண்டுகளில், புதிய கல்விக் கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து இலக்குகளையும் அடைந்து புதுவை பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் 25 இடங்களிலும், உலகத் தரத்தில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களிலும் ஒன்று என்ற இலக்கினைக் கண்டிப்பாக அடையும்.. இவ்வாறு துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews