அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2020: முதல் பரிசு ₹.10,000/-, விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 21, 2020

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி 2020: முதல் பரிசு ₹.10,000/-, விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 படைப்பாளிகளே, நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிறுகதைப் போட்டி அறிவிப்பு இதோ...

முதல் பரிசு₹10,000/-
இரண்டாம் பரிசு 17,500/-
மூன்றாம் பரிசு 75,000/-
இந்தப் பரிசுகள் மட்டுமல்லாது, பிரசுரத்துக்குத் தேர்வாகும் ஒவ்வொரு கதையும் சன்மானம் பெறும்.
அறிமுக எழுத்தாளராக இருந்தால் சிறப்புப் பரிசு உண்டு. ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். விதிமுறைகள்:

கல்கியில் நான்கு பக்கங்களுக்கு (1200 வார்த்தைகளுக்குள்) இருக்க வேண்டும்.
படைப்பு சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்படமாட்டா.
முழு வெள்ளைத்தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். கதையை தபாலிலோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பலாம்.
> மின்னஞ்சலில் கதைகளை அனுப்புவோர் Subjectஆக ‘சிறுகதைப் போட்டி 2020' எனக் குறிப்பிட்டு editorkalki@kalkiweekly.com-க்கு அனுப்பவேண்டும். கதையை மின்னஞ்சலின் இணைப்பாக அனுப்ப வேண்டும்.
எழுத்தாளரின் முழு முகவரி, போன் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
> போட்டிக்கு அனுப்பும் கதையைத் திருப்பி அனுப்ப இயலாது. கதையின் பிரதியை நீங்கள் வைத்துக் முடிவுகள் வெளியாகும்வரை வேறு இதழுக்கோ இணையதளத்துக்கொ, வலைப்பதிவுகளுக்கோ, இதர போட்டிகளுக்கோ அனுப்பக்கூடாது. > பரிசுக்குரிய கதைகளை, நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.
- முடிவு வெளியாகும் வரை, எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ கூடாது.
அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 என்று உறையின் மேல் தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், கல்கி, கல்கி பில்டிங்க்ஸ், 47-NP, ஜவாஹர்லால் நேரு சாலை, ஈக்காடுதாங்கல், சென்னை - 32
* கதைகள் வந்து சேரக் கடைசித் தேதி: ஆகஸ்ட் 31, 2020.
* போட்டி முடிவும், முதல் பரிசுக் கதையும் அக்டோபர் மாத கல்கி மின் இதழில் (www.kalkionline.com) வெளியாகும்.
* படைப்பாளிகள், வாசக எழுத்தாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க அழைக்கிறோம்.
ஆசிரியர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews