சான்றிதழ் பதிவேற்றினால்தான் இன்ஜி., படிப்புக்கு கவுன்சிலிங்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 26, 2020

சான்றிதழ் பதிவேற்றினால்தான் இன்ஜி., படிப்புக்கு கவுன்சிலிங்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜி., கவுன்சிலிங்கிற்கு கட்டணம் செலுத்துவதற்கான தேதி முடிந்த நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே, கவுன்சிலிங் அழைப்பு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதும் இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. விண்ணப்பம், சான்றிதழ் பதிவேற்றம் என, அனைத்தும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.இன்ஜி., படிப்புக்கான விண்ணப்பம் கடந்த ஜூலை, 15ம் தேதி துவங்கி ஆக., 16ம் தேதி நிறைவடைந்தது. இன்ஜி., படிப்புக்கான கட்டணம் மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஆக., 20ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.மொத்தம், 1.60 லட்சம் பேர் கவுன்சிலிங்கிற்கு பதிவு செய்துள்ளனர்.
இதில், 1.31 லட்சம் பேர் கவுன்சிலிங் கட்டணம் செலுத்திய நிலையில், 1.14 லட்சம் பேர் சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ளனர்.இவர்களில் சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவர்கள் மட்டுமே, கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்படுவர் என தொழில்நுட்ப இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews