சுவாமி விவேகானந்தரின் நண்பர் விர்சந்த் காந்தி குறித்து வீடியோ பதிவு செய்த பெரியகுளம் வரலாறு ஆசிரியர் சாகித்யனுக்கு அமெரிக்காவில் பேசுவதற்கு அழைக்கப்பட்டு உள்ளார். பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் சாகித்தியன் 28. சென்னை லயோலா கல்லுாரியில் எம்.ஏ., வரலாறும், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லுாரியில் எம்.பில்., முடித்து தற்போது பி.எச்.டி.,படிக்கிறார்.
அனைவரும் வரலாற்றை விரும்பும் வகையில் 'ஹிஸ்டரி வாத்தியார்'என்ற யூடியூப் சேனல் வழியாக வரலாறுகளை காட்சிகளாகவும், பேச்சு வழியாகவும் ஒளிபரப்பி வருகிறார். சுவாமி விவேகானந்தர் நண்பர் விர்சந்த் காந்தி குறித்து ஒளிபரப்பு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதில் விர்சந்த் காந்தி 1893ல் சிகாகோவில் நடந்த உலக மத நாடாளுமன்றத்தில் சமண மதத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சமண அறிஞர் ஆவாா். சமண மதம், பிற மதங்கள் தத்துவத்தை குறித்து விரிவாக எழுதியும், பேசியும் சுவாமி விவகோனந்தரின் பாராட்டுகளை பெற்றவர்.
பா.சாகித்யன் கூறியதாவது: 'விர்சந்த் காந்தி குறித்து வீடியோ பதிவினால், அமெரிக்காவில் வாஷிங்டன் ஜெயினா என்ற அமைப்பின் நாளிதழில் இப்பதிவை பாராட்டி செய்தி வெளியிட்டு பாராட்டியுள்ளனர்.2021 ல் இந்த அமைப்பினர் அமெரிக்காவில் நடத்த உள்ள விழாவிற்கு சிறப்பு பேச்சாளராக அழைத்துள்ளனர். அனைவரும் விரும்பி படிக்கும் தினமலர் நாளிதழை என் தந்தை ஆசிரியர் பாலமுருகன் 50 ஆண்டுகளாக சந்தாதாரராக உள்ளார். நான் சிறுவயது முதல் தினமலர் படிப்பதால் அறிவியல், வராலாறுகளை தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது', என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups