அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் M.Ed., முடித்து பணியாற்றி வரும் பேராசிரியர்களை, கல்வியியல் கல்லூரிகளுக்கு பணியிட மாற்றம் செய்ய உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஏதுவாக, 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் M.Ed., மற்றும் NET, SLET அல்லது Ph.D., முடித்து பணியாற்றி வரும் தகுதியானவர்களை நியமிக்க கல்லூரிக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் M.Ed., முடித்து பணியாற்றி வரும் தகுதியானவர்கள் குறித்த விவரங்களை நாளைக்குள் ஒப்படைக்க கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் உத்தரவிட்டிருந்தார். இதை அடுத்து, தகுதியானவர்கள் விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் நியமிக்கப்படுவார்கள் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கல்வியியல் கல்லூரிகளுக்காக புதிய பேராசிரியர்களை தேர்வு செய்யாமல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களை மடைமாற்றம் செய்யும் செயலுக்கு பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups