மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக்கொள்கை குறித்து நாடு தழுவிய விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் இந்த அறிக்கையின் சாரத்தை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து அலசிக்கொண்டுள்ளனர். சாதகமும் பாதகமும் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன. 5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீத ஒதுக்கீடு போன்ற அம்சங்கள் புதிய கல்விக்கொள்கையில் வரவேற்கத்தக்க அம்சங்களாக சொல்லப்படுகின்றன.
அதேநேரத்தில் 3ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு, கலைக்கல்லூரிகளுக்குக் கூட பொது நுழைவுத் தேர்வு, 6ம் வகுப்பிலேயே தொழில்கல்வியை புகுத்துதல் போன்றவை எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்று குற்றம்சாட்டப்படுகிறது. மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை கொண்டுவந்தது இந்தி, சமஸ்கிருத திணிப்பே என்ற புகாரும் எழுந்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் புதிய கல்விக்கொள்கை பண்டைக்கால பாடத்திட்ட முறைக்கு திசைதிருப்பும் முயற்சி என்ற கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன. நாட்டிற்கும் மாணவ சமுதாயத்துக்கும் இப் புதிய கல்விக்கொள்கை பலனளிக்குமா, பாதகம் செய்யுமா என்பது குறித்து நான்கு ஆளுமைகள் இப் பகுதியில் அலசுகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்வியை முழுமையாக மாநில நிர்வாகத்தில் ஒப்படைப்புச் செய்யலாம்.மும்மொழித்திட்டம் கைகூடாது.ABMKPK
ReplyDelete