புதிய கல்விக் கொள்கையால் சாதக, பாதகம் என்னென்ன?: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 02, 2020

Comments:0

புதிய கல்விக் கொள்கையால் சாதக, பாதகம் என்னென்ன?: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழி பட்டியலில் சீன மொழி நீக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு திமுக எம்.பி கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 1986ல் உருவாக்கப்பட்ட, ‘தேசியக் கல்விக் கொள்கை,’ கடந்த 1992ம் ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், இந்த கொள்கையை மீண்டும் மாற்றி அமைப்பதற்காக ‘புதிய கல்விக் கொள்கை’ வகுக்கப்படும் என, கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது பாஜ தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்ததும், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவை அமைத்தது. இக்குழு பல்வேறு ஆய்வுகளை செய்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசிடம் தனது அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், இது கிடப்பில் போடப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி, கிடப்பில் உள்ள பல்வேறு திட்டங்கள், சட்டங்களை ஓசைப்படாமல் மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. அந்த வரிசையில், பிரதமர் மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு திடீரென ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். புதிய கல்விமுறையின்படி, பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படவுள்ளது. விருப்ப மொழித் தேர்வாக இந்திய, அந்நிய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிலையில்,மும்மொழிக் கொள்கையால் எதிர்காலத்தில் எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்பதை நடைமுறைப்படுத்துவார்கள். அதனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இருமொழிக் கொள்கையே போதுமானது என தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், புதிய கல்வி கொள்கை 2020 தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் மும்மொழிக் கொள்கை, உயர்கல்வி படிப்புக்கு நுழைவுத்தேர்வு, M.Phil ரத்து உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதவும் வாய்ப்புகள் அதிக உள்ளது.
புதிய கல்வி கொள்கையை செயல்படுத்துவதில், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து, முதல்வர் இ.பி.எஸ்.,சுடன், அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். CLICK HERE TO READ MORE NEWS நாடு முழுவதும் ஒரே தரம்; ஒரே கல்வி என்ற அடிப்படையில், புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த கல்வி கொள்கையில், பல்வேறு நிறை, குறைகள் உள்ளதால், பாராட்டுக்களும், விமர்சனங்களும் உள்ளன.சில மாநிலங்கள், புதிய கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்துள்ளன; சில மாநிலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும், அரசியல் கட்சிகள் மத்தியில், பாராட்டும், எதிர்ப்பும் உள்ளது.இந்நிலையில், புதிய கல்வி கொள்கையை, தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில், நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. CLICK HERE TO READ MORE NEWS CLICK HERE TO READ MORE NEWS தமிழகத்தின் மொழி கொள்கை, கலாசாரம், பன்முக தன்மை பாதிக்காத வகையில், எந்தெந்த அம்சங்களை மட்டும், புதிய கல்வி கொள்கையில் ஏற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து, விரிவானஅறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுடன், செயலர் தீரஜ்குமார், கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, கருப்பசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் ஆன்லைன் கல்வியை அமல்படுத்துவது, தனியார், 'டிவி'க்கள் வாயிலாக, வீடியோ பாடங்கள் நடத்துவது, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்தும், அதிகாரிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளார்.இதையடுத்து, பள்ளி கல்வி துறையின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, முக்கிய முடிவுகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. CLICK HERE TO READ MORE NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews