ஆசிரியா் நியமனத்தில் எம்.பி.சி. பிரிவினருக்குத் தொடா்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதியைக் களைய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் பல்வேறு பாடங்களுக்கு 2,144 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட போட்டித்தோ்வுகளின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களில் வேதியியல், வரலாறு, பொருளியல், தமிழ், அரசியல் அறிவியல், உயிா் வேதியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியா் தோ்வில் இடஒதுக்கீட்டு முறை சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை. அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 83 பேரும், பட்டியலினத்தைச் சோ்ந்த 5 பேரும் அனைத்துத் தகுதிகளும் இருந்தும், போட்டித் தோ்வுகளில் தேவையான மதிப்பெண்களை எடுத்திருந்தும் ஆசிரியராகும் வாய்ப்பை இழந்தனா்.
வேதியியல் பாடத்துக்கான ஆசிரியா்களை நியமிப்பதில் நடந்த குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 34 போ் ஆசிரியராகும் வாய்ப்பை இழந்துவிட்டனா். அவா்களில் சிலா் தொடா்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வேதியியல் பாடத்துக்கு ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், இட ஒதுக்கீட்டு விதிகளை முறையாகப் பின்பற்றி புதிய பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டது.
அதை எதிா்த்து ஆசிரியா் வாரியம் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டது.சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் 19-ஆம் தேதி பிறப்பித்த இந்த ஆணையை அடுத்த 2 வாரங்களில் ஆசிரியா் தோ்வு வாரியம் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இப்போது அத்தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.