அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்: அமைச்சர், கலெக்டர் பாராட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 05, 2020

Comments:0

அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதலிடம்: அமைச்சர், கலெக்டர் பாராட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில், புதுச்சேரி மாநிலத்தில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவியை, அமைச்சர், கலெக்டர் பாராட்டினர். காரைக்கால், பாரதிதாசன் நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்; கப்பலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா. தம்பதியின் மகள் சரண்யா, 27; காரைக்கால் ஓ.என்.ஜி.சி., பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 முடித்தார்.புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரியில், இ.சி.இ., பிரிவில், 2015ல், பட்டம் பெற்றார். மூன்றாவது முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில், 36வது இடத்திலும், புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். சரண்யாவிற்கு, அமைச்சர் கமலக்கண்ணன், கலெக் டர் அர்ஜுன் சர்மா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். சரண்யா கூறியதாவது: நான் அரசு பள்ளியில் படித்தேன். பள்ளி பருவத்திலேயே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என விரும்பினேன். அதனால், சிவில் சர்வீஸ் தேர்விற்கான பயிற்சி எடுத்தேன். இரு முறை தோல்வி அடைந்தாலும், விடா முயற்சி மேற்கொண்டதில், மூன்றாம் முறை தேர்வில், அகில இந்திய அளவில், 32வது இடமும், மாநிலத்தில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்றிருப்பது பெருமையாக உள்ளது. முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால், அரசு பள்ளி மாணவர்களும் ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதிக்கலாம். கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்ற விரும்புகிறேன்.இவ்வாறு கூறினார்.
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு அமைச்சர் கமலக்கண்ணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. 829 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில் நேர்காணல் நடைபெற்று தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பிரதீப் சிங் என்பவர் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்தும் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அகில இந்திய அளவில் 36வது இடத்தையும் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்தையும் காரைக்காலைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி பிடித்துள்ளார்.
அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் சரண்யாவை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். 36 வது இடத்தை பிடித்த சரண்யா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாவது இடத்தை பிடித்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சரண்யா கூறுகையில், அரசு பள்ளியில் படித்து இந்த இடத்தை பிடித்துள்ளதாகவும், தான் தமிழகத்தில்தான் பணியாற்ற வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews