புதிய கல்விக் கொள்கையின் நல்ல அம்சங்களால் வருங்கால இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை:
"ஆழ்ந்த ஆய்வு, பரந்த கலந்துரையாடல், கல்வியாளர்களின் கருத்து அறிதலுக்குப் பின் புதிய தேசிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட கொள்கையில் பல சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன.
குறிப்பாக,
- 3 முதல் 5 வயது வரை மழலையர் கல்வி வழங்குதல்
- பிளஸ் 2 வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி
- 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி வழங்கும் லட்சியம்
- நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி) 6 சதவிகிதம் நிதி கல்விக்கு ஒதுக்கீடு
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேசம் முழுவதும் சமச்சீர் கல்வியை அமல் செய்தல் - உயர் கல்வியை முறைப்படுத்த ஒரே ஒழுங்காற்று ஆணையம், மும்மொழிக் கொள்கை அறிமுகம், இதனை செயல்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியிருக்கும் சிறப்பு அம்சம்
- பிரதமரைத் தலைவராக கொண்ட தேசிய கல்விக்குழு அமைத்தல்
- 34 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்பு அறிவிக்கப்பட்டுள்ள கல்வி கொள்கை
- புதிய நவீன இந்தியாவை அறிவாற்றல் மிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் லட்சியத்தோடு வெளியிடப்பட்டுள்ள கல்வி கொள்கை
நல்ல அம்சங்களை கொண்ட இக்கல்வி கொள்கையால் வருங்கால இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக குறிப்பிட விரும்புகிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

This comment has been removed by a blog administrator.
ReplyDelete