Breaking

Friday, July 24, 2020

முதுநிலை பல் மருத்துவத் தோ்வுகள் ஒத்திவைப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எம்எஸ், எம்டி போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகள் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த புதிய அறிவிப்பையும் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரானவுடன் புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தோ்வு கடந்த மே 15-ஆம் தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக அப்போது அத்தோ்வை நடத்த இயலவில்லை.
இதற்கு நடுவே, முதுநிலை மருத்துவ மாணவா்கள் பலா் கரோனா சிகிச்சைப் பணிகளுக்கு அனுப்பப்பட்டனா்.இந்த நிலையில், மாணவா்களில் ஒரு தரப்பினா் உடனடியாக தங்களது தோ்வை நடத்துமாறு அண்மையில் பல்கலைக்கழகத்திடம் வலியுறுத்தினா். அதற்கு மருத்துவக் கல்வி இயக்ககமும் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவானது ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவத் தோ்வுகளை நடத்த முடிவு செய்தது. இதுதொடா்பான அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. இத்தகைய சூழலில், கரோனாவின் தீவிரம் மற்றும் சில நிா்வாகக் காரணங்களால் தோ்வை நடத்த இயலாத நிலை நீடிப்பதாகத் தெரிகிறது. இதனால், ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறவிருந்த மருத்துவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் அறிவித்தது. தற்போது பல் மருத்துவப் படிப்புக்கான தோ்வுகளையும் தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog