WhatsAppல் அறிமுகமான புதிய Shotcut அம்சம் - முழு விவரங்கள் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 12, 2020

Comments:0

WhatsAppல் அறிமுகமான புதிய Shotcut அம்சம் - முழு விவரங்கள் இதோ!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாட்ஸ்அப் அதன் ஐபோன் பயனர்களுக்கான புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெறும் புதிய அம்சங்கள் மற்றும் மாற்றங்கள் என்னென்ன, இதோ முழு விவரங்கள். ஐபோன் பயனர்களுக்காக வாட்ஸ்அப், புதிய பீட்டா அப்டேட்டை வெளியிட்டுள்ளது, இந்த அப்டேட்டில் காண்டாக்ட்ஸ் ஷார்ட்கட் எனும் புதிய அம்சம் அணுக கிடைக்கிறது. அதோடு, புதிய பீட்டா வெர்ஷன் ஐபோன்களுக்கான வாட்ஸ்அப்பில் காணப்பட்ட பொதுவான பிழைகளுக்கான திருத்தங்களுடனும் மற்றும் வாய்ஸ் ஓவர் மேம்பாடுகயும் கொண்டுவருகிறது. WABetaInfo வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபோனுக்கான புதிய வாட்ஸ்அப் v2.20.80.22 பீட்டா வெர்ஷனை பெறும் பயனர்கள் iOS ஷேர் ஷீட்டில் நிலையான பல ஷார்ட்கட்களைக் காண முடியும். முந்தைய 2.20.70 பீட்டா வெர்ஷனில், சில பயனர்கள் காண்டாக்ட்ஸ் ஷார்ட்கட்களைப் பயன்படுத்த முடிந்தது. இந்த பீட்டா அப்டேட்டில், வாட்ஸ்அப் சாட்டில் ஒரு செய்தியை அனுப்பிய பிறகு, பெரும்பாலான பயனர்களால் ஷேர் ஷீட்டில் ஷார்ட்கட்களை காண முடிகிறது. இந்த புதிய வாட்ஸ்அப் அப்டேட் ஆனது iOS 13.6 beta version-ன் கீழ் வேலை செய்யும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், கூறப்படும் காண்டாக்ட்ஸ் ஷார்ட்கட் அம்சமானது ஒரு ஐகானையும் கொண்டுள்ளது, இது வாட்ஸ்அப் உடன் ஒத்திசைக்கப்பட்டது. எனவே, ஒரு காண்டாக்ட் தனது சுயவிவரப் படத்தை மாற்றினால் கூட,ஷேர் ஷீட்டில், பயனர் எப்போதும் மிகவும் புதுப்பிக்கப்பட்ட ஒன்றையே காண்பார். இது கடந்த மாதம் ஐபோனுக்கான வாட்ஸ்அப் v2.20.70.19 பீட்டாவில் முதன்முதலில் காணப்பட்டது, ஆனால் அப்போது இந்த அம்சத்தினை ஒரு சில பயனர்கள் மட்டுமே பெற்றனர். புதிய காண்டாக்ட்ஸ் ஷார்ட்கட் அம்சத்துடன் சேர்த்து இந்த லேட்டஸ்ட் பீட்டா அப்டேட்டட் ஆனது வாட்ஸ்அப் வாய்ஸ் ஓவருக்கான ஆதரவையும் மேம்படுத்தியுள்ளது, குறிப்பாக நீங்கள் சாட்டை archive மற்றும் unarchive செய்யும் போது. முன்னதாக பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் பிளாட்பார்மான வாட்ஸ்அப் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்கள், கியூஆர் குறியீடுகள், டெஸ்க்டாப் & வெப்பிற்கான டார்க் மோட் பயன்முறை மற்றும் க்ரூப் வீடியோ காலிங்கில் சில மேம்பாடுகள் போன்ற அப்டேட்களை பீட்டாவிலிருந்து அதன் நிலையான பதிப்பிற்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. முதலில், பயனர்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்புகளில் ‘அனிமேஷன் ஸ்டிக்கர்களை’ பார்க்கத் தொடங்குவார்கள். இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆனது நகரும் அல்லது ஜிஃப்-வீடியோவாக இருக்கும். மேலும் “நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சாத் செய்ய எளிய, நம்பகமான மற்றும் தனிப்பட்ட வழியை வழங்குவதில் எங்கள் கவனம் உள்ளது – யாருடனும், எங்கும் இணைக்க வாட்ஸ்அப் மிகவும் பயனுள்ள ஒரு வழியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த எங்கள் தயாரிப்பு வடிவமைப்பை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அடுத்த சில வாரங்களில் வெளிவரும் சில புதிய அம்சங்களை உறுதிப்படுத்த நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றும் அந்த அறிக்கை கூறியது. வரவிருக்கும் வாட்ஸ்ஆப் அப்டேட் ஆனது QR குறியீடுகளையும் பெறும், இது பயனர்களை புதிய தொடர்புகளை எளிதாக சேர்க்க உதவும். அவர்கள் செய்ய வேண்டியது மற்ற நபரின் QR குறியீட்டை ஸ்கேன் செய்வது மட்டுமே, பின்னர் அவர்களின் தொடர்பு தானாகவே வாட்ஸ்அப்பில் சேர்க்கப்படும். வாட்ஸ்அப், டார்க் மோட் பற்றி அறிமுகமோ அல்லது விளக்கமோ தேவைப்படாது. மிகவும் பிரபலமான இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயன்பாட்டிற்கு ஏற்கனவே கிடைத்திருந்தாலும் அடுத்த சில வாரங்களில் இதே அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பதிப்பில் வெளியிடப்படும். வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளபடி, வாட்ஸ்அப் க்ரூப் காலிங் அம்சத்தில் சில மேம்பாடுகளைச் செய்துள்ளது. இப்போது ஒரு வீடியோ அழைப்பில் 8 பேர் வரை இடம்பெறலாம் என்பதால், குறிப்பிட்ட நபரை மட்டுமே அழுத்தி, அவரின் வீடியோவை முழுத் திரையில் வைத்திருக்க அனுமதிக்கும் அம்சம் உட்பட சில அட்டகாசமான அப்டேட்களை நாம் எதிர்பார்க்கலாம். கூடுதலாக, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அம்சம் இப்போது KaiOS-க்கு அணுக கிடைக்கிறது. வாட்ஸ்அப்பைக் கொண்ட KaiOS போன் பயனர்கள் இப்போது இந்த பிரபலமான அம்சத்தை அனுபவிக்க முடியும், இது 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துபோகும் ஸ்டேட்டஸ்களைப் பகிர அனுமதிக்கிறது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews