உலக வரலாற்றில் இன்று - ஜூன் 30 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 30, 2020

Comments:0

உலக வரலாற்றில் இன்று - ஜூன் 30

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிகழ்வுகள்
296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.
1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன.
1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது.
1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
1859 – பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார்.
1882 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
1886 – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை மொண்ட்ரியாலில் இருந்து புறப்பட்டது. இது சூலை 4 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் மூடி துறையை அடைந்தது.
1905 – சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. 1908 – துங்குசுக்கா நிகழ்வு: புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
1910 – இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.[1]
1912 – கனடாவில் ரெஜைனா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
1922 – டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன், டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1934 – நீள் கத்திகளுடைய இரவு: இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.
1936 – எத்தியோப்பியா மீது இத்தாலியின் படையெடுப்பை அடுத்து அபிசீனியப் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி உலக நாடுகள் சங்கத்திடம் நிவாரண உதவி கோரினார்.
1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து செர்போர்க் சண்டை முடிவடைந்தது.
1956 – அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.
1959 – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். 1960 – பெல்சிய கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து காங்கோ குடியரசு (லெயோப்பால்டுவில்) என்ற பெயரில் விடுதலை பெற்றது.
1971 – சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.
1977 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
1985 – பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
1990 – கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
1994 – பிரான்சில் ஏர்பஸ் ஏ330 இன் சோதனைப் பறப்பின் போது விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 9 பேரும் உயிரிழந்தனர்.[2]
1997 – முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
1997 – ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
2002 – பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.
2009 – ஏமன் வானூர்தி ஒன்று கொமொரோசு அருகே இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர், 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினார்.[3]
2013 – எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.
2015 – இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர். பிறப்புகள்
கிமு 156 – ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87)
1912 – மாதவையா கிருட்டிணன், தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996)
1919 – நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994)
1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர்
1931 – சித்ராலயா கோபு, தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
1934 – சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், இந்திய வேதியியலாளர்
1948 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)
1964 – மார்க் வாட்டர்ஸ், அமெரிக்க இயக்குநர்
1966 – மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1967 – விக்டோரியா காசுபி, அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்
1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர்
1983 – செரில் கோல், ஆங்கிலேய நடன அழகி
1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர் இறப்புகள்
1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825)
1919 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842)
2007 – சாகிப் சிங் வர்மா, தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943)
1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877)
1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909)
1975 – விந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1916)
2007 – சாகிப் சிங் வர்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1943)
சிறப்பு நாள்
சிறுகோள் நாள்
விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பெல்ஜியத்தில் இருந்து 1960)
புரட்சி நாள் (சூடான்)
கடற்படை தினம் (இசுரேல்)
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews