மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வெளியிடும் அரசாணையை ரத்து செய்ய தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தல்..
மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி முடிவுகளை வெளியிடும் அரசாணையை ரத்து செய்ய தலைமையாசிரியர்கள் கழகம் வலியுறுத்தல்..
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழக அரசானது கரோனோ தொற்று தடுப்பு சூழ் நிலையை கருத்தில் கொண்டு பத்து மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகளை ரத்து செய்து கொரோனோ தொற்று நோயிலிருந்து மாணவச் செல்வங்களை பாதுகாத்து வரலாற்று சிறப்புமிக்க அரசாணையை வெளியிட்டமைக்கு எமது அமைப்பு மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
அதே வேளையில், தமிழக அரசானது காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி முடிவுகளை வெளியிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஏனெனில் பெரும் பகுதியான தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கற்றல் - கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகள் என்பது குறைந்த பாடப்பகுதியை கொண்ட UNIT TEST, தனியார் நிறுவனத்திடம் வாங்கப் பட்ட கேள்வி தாட்களை கொண்ட தேர்வு முறை மற்றும் விரிவாக பாடம் நடத்தும் முறையை தவிர்த்து, மாறாக NEET தேர்வுக்கான பயிற்சி அளித்தல் போன்ற முறைகளை கையாண்டு வருகின்றனர், இவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை கையாளுவது என்பது மிகக் குறைவான நிலையே ஆகும்.
மேலும், சில தனியார் பள்ளிகள் சமீப காலமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை சட்டவிரோதமான வழிகளை கையாண்டு திருத்துவதற்கான முயற்சியை எடுத்து வருகிறது என்று காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் பத்து மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் ஒரு சில விலையில்லா பாட புத்தகம் அரையாண்டு தேர்வு முடியும் நிலையில் வழங்கப்பட்டு வந்தது , அதோடு பத்தாம் வகுப்பு தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்ட காலச் சூழ்நிலை கொண்ட ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகம் வழங்கும் வரை மாணவர்களுக்கு குறிப்பெடுத்து படிக்க வேண்டுமென்று அரசு அறிவுறுத்திய காலம் என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் அரசு பொதுத் தேர்வு காலங்களில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு "சொல்வதை எழுதுபவர்" ஒருவரை மாவட்டத் தேர்வுத்துறையானது நியமனம் செய்து தேர்வு எழுதுவது வழக்கம்.
மாறாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு காலங்களில் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மாற்று திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு மேற்கண்ட நடைமுறையை பின்பற்றவில்லை என தெரிய வருகிறது.
மேலும், பல மாணவர்கள் தனித் தேர்வர்களாக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதுவதால், அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுத வாய்ப்பில்லாத காரணத்தினாலும் அனைத்து மாணவர்களையும் சமமாக பார்க்க வேண்டியது ஒரு அரசின் கடமை என்பதாலும் இப்பொழுது கையாளும் முறை தவறான ஏற்ற இறக்கங்களை மாணவர்களிடத்தில் ஏற்படுத்தி, தாழ்வு மனப்பான்மையை இளம் வயதில் ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஆண்டில், அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர் காலிப் பணியிடம் நிரப்பாமல் இருக்க, அந்த பாடப்பகுதியின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண்கள் என்பது மிக குறைந்த, சொற்ப மதிப்பெண்களே பெற்றிருக்க முடியும் என்பதால் இந்த மதிப்பெண்களை மாணவர்களின் தேர்ச்சிக்கு கணக்கில் எடுத்துக் கொள்வது பொருத்தமாக இருக்காது.
மேலும், கல்வி மற்றும் மாணவர்களின் மதிப்பெண்களை காசாக்கும் தனியார் பள்ளிகளின் கற்றல் கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகளையும், ஆசிரியர்கள் காலி பணியிடங்களுடன் புத்தகம் இல்லாமல் குறிப்பெடுத்து பாடம் கற்று தேர்வு எழுதி குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள அரசு பள்ளி மாணவர்களின் தரநிலையை தமிழக அரசு சமநிலையில் கணக்கிடுவது அரசின் மீது நம்பகத்தன்மையை உருவாக்காது.
எனவே தமிழக அரசு மற்றும் அரசு தேர்வுத்துறை இயக்ககம், இந்த ஆண்டை கொரோனோ தொற்று தடுப்பு ஆண்டாக கருத்தில் கொண்டு மதிப்பெண் அட்டை (MARK SHEET) வழங்குவதற்கு பதிலாக, தேர்ச்சி அட்டை (PASS CERTIFICATE) யை வழங்க வேண்டும் என்றும்,
இவர்களின் 11ம் வகுப்பு சேர்க்கையில் போட்டி ஏற்படுகின்ற போது பின்வருவனவற்றை கருத்தில் கொண்டு முன்னுரிமை வழங்கலாம் என எமது அமைப்பு கருதுகிறது.
1.அதே பள்ளியில் படித்தவர்,
2.மாணவர்களின் விருப்பம்,
3.NODEL CENTRE மாணவன்,
4.அரசின் இட ஒதுக்கீடு,
5.பள்ளிக்கு அருகாமையில் வசிப்பவர்,
6.விளையாட்டில் திறமையானவர்,
7.பிற திறமை பெற்றவர்கள்
மற்றும் 8. NCC, JRC, OTHER SCHOOL CLUB ACTIVITIES என கணக்கிடலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் தொழிற்க் கல்வி (POLY TECH, ITI) படிப்பு சேர்க்கையில் மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுடன் தொழிற்கல்வி நிறுவனம் மதிப்பெண் தேர்வுகளை தவிர்த்து, அந்த நிறுவனத்திற்கென குறைந்தபட்ச விதிமுறைகளை அரசே வகுத்து தர வேண்டும். அதனால் தமிழக அரசானது பத்து மற்றும் முதலாமாண்டு மேல்நிலைக் கல்வி மாணவர்களின் தேர்ச்சியை மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்காமால்,வருகை சான்று அடிப்படையில், அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்புடன் தேர்ச்சி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மாநிலக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
1.அதே பள்ளியில் படித்தவர்,
2.மாணவர்களின் விருப்பம்,
3.NODEL CENTRE மாணவன்,
4.அரசின் இட ஒதுக்கீடு,
5.பள்ளிக்கு அருகாமையில் வசிப்பவர்,
6.விளையாட்டில் திறமையானவர்,
7.பிற திறமை பெற்றவர்கள்
மற்றும் 8. NCC, JRC, OTHER SCHOOL CLUB ACTIVITIES என கணக்கிடலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன் தொழிற்க் கல்வி (POLY TECH, ITI) படிப்பு சேர்க்கையில் மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுடன் தொழிற்கல்வி நிறுவனம் மதிப்பெண் தேர்வுகளை தவிர்த்து, அந்த நிறுவனத்திற்கென குறைந்தபட்ச விதிமுறைகளை அரசே வகுத்து தர வேண்டும். அதனால் தமிழக அரசானது பத்து மற்றும் முதலாமாண்டு மேல்நிலைக் கல்வி மாணவர்களின் தேர்ச்சியை மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்காமால்,வருகை சான்று அடிப்படையில், அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்புடன் தேர்ச்சி அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மாநிலக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.