Breaking

Tuesday, June 09, 2020

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீடு முதல்வரிடம் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் நாளை கலையரசன் குழு அறிக்கை தாக்கல் செய்கிறது. 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது தமிழகத்தில் மருத்துவப் படிப் பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதுதொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி பொன்.கலையரசன் தலைமையில் 7 பேர் கொண்ட ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் பழனி சாமியை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்த ஆணையத் தலை வர் பொன்.கலையரசன், பரிந்துரை அறிக்கையை வழங்கினார். இந்த அறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் விரைவில் கூடஉள்ள தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog