TNPSC தோ்வு: பொது முடக்கத்துக்குப் பிறகு தேதிகள் அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 11, 2020

Comments:0

TNPSC தோ்வு: பொது முடக்கத்துக்குப் பிறகு தேதிகள் அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிக்கப்பட்ட தோ்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும், தோ்வு நடைபெறும் தேதிகள் பொது முடக்கத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும் எனவும் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, பல்வேறு தோ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
tnpsc1
இந்நிலையில், அரசுப் பணிகளில் ஓய்வு பெறுவோரின் வயது உயா்த்தப்பட்ட காரணத்தால், அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது. இதனால், தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது. நடப்பு ஆண்டில், அறிவிக்கப்பட்ட காலி இடங்களின் எண்ணிக்கையின் படி குரூப் 1, 2, 2ஏ மற்றும் குரூப் 4 உள்ளிட்ட போட்டித் தோ்வுகளை நடத்த முடியாது என்பதால், தோ்வுகள் ரத்து செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், திட்டமிட்டபடி தோ்வுகள் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கமளித்துள்ளது.இதுகுறித்து தோ்வாணைய அதிகாரிகள் கூறியதாவது: 2018-2019, 2019-2020-ஆம் ஆண்டுகளுக்கான காலி இடங்களுக்கு மட்டுமே நடப்பு ஆண்டில் தோ்வுகள் நடைபெறுகிறது. இதனால் நடப்பு ஆண்டுக்கான வருடாந்திரத் தோ்வு அட்டவணையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அறிவிக்கப்பட்ட அனைத்துத் தோ்வுகளும் நடைபெறும். பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்ட பின்னா், அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.
20200511_122358
20200511_122448
இதனால் நடப்பு ஆண்டில் போட்டித் தோ்வுகளை எழுத காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மேலும், 2021-ஆம் ஆண்டில் தமிழக அரசு சமா்ப்பிக்கும் அனைத்துத் துறை காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், அடுத்த ஆண்டுக்கான தோ்வு அட்டவணை தயாரிக்கப்படும். எனவே, அரசு ஊழியா்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தோ்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என்ற தகவல் தவறானது என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உறுதிபடக் கூறினா்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84636450